இயந்திரம் மற்றும் அச்சு துறைகளில் கைகேர்ந்தவர்களை உருவாக்கும் புதிய திட்டமொன்று, வின்ட்சரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதனை, தொழிலாளர், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் மான்டே மெக்நாட்டன் அறிவித்துள்ளார்.
19 மில்லியன் டொலர்கள் நிதியால், உருவாகவுள்ள இந்த திட்டத்தினால், சுமார் 1000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளன.
இந்த நிதி, 10 வாரங்கள் முதல் நான்கு மாதங்கள் வரை 4,000 ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
இந்த திட்டத்தின் ஊடாக, தச்சு கூட்டுறவு மாணவர்கள் பட்டதாரிகளாக மாறுவதோடு, வகுப்பறைக்கு வெளியே பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் உருவாகின்றது.
குறித்த இயந்திரம் மற்றும் அச்சு கருவிகளை வாங்குவதற்கு, 5 மில்லியன் நிதி ஏற்கனவே பெறுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது சுற்று முதலீட்டில் மேலும் 14 மில்லியன் செலுத்தப்படும்.