கடந்த வாரம் (June 04, 2023) கனடாவில் இருந்து இயங்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழா நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் வலியை எள்ளி நகையாடி கவிபுனைந்த எழுத்தாளர் சாம்ராஜுக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டுக்கான கனடா தமிழ் இலக்கிய விருது விழாவில் புனைவு விருது எழுத்தாளர் சாம்ராஜுக்கு வழங்கப்பட்டது. யார் இந்த சாம்ராஜ்?
2015 ஆண்டு ஆசிரியர் கோணங்கி- க் கொண்டு “கல் குதிரை” என்ற பெயருடன் வெளி வரும் சிறு பத்திரிக்கையில் ஒட்டுமொத்த இனத்தின் வலியை கேவலப்படுத்தி கவிதை .படைத்தவர் சாம்ராஜ் என்ற நபர்.
இதுதான் அந்த கவிதை ….
“ஒண்டிப்புலி சர்பத் அந்தத் தீவில் மிகப் பிரபலம்
சீறும் அதன் சிவப்பு முகமே குப்பியில் லட்சினை
அது பெயருக்குப் பொருத்தமாய் ஊரில் வேறு எவரும்
தலையெடுக்காது பார்த்துக்கொண்டது
கூழ், பதநீர், கள் எல்லாவற்றிக்கும் தடை
சர்க்கஸிலும் கூட புளிக்குழம்பு தேச விரோதம்
மொழியிலிருந்து குதித்தோடியது அந்த நான்கு கால் மிருகம்.
கால் நூற்றாண்டு காலத்தில் அதற்கு சர்பத்திற்கும் ரத்தத்திற்கும் குழப்பம்
ரத்தத்தை சர்பத் என்றது சர்பத்தை ரத்தம் என்றது
தீவின் அக்கரையில் வாழும் அதன் கழுதைப்புலி முகவர்கள் விற்று வாழ்ந்தனர் வெகுகாலமாய் அதை
ஒரு வைகாசி மாதத்தில் ஒண்டிப்புலி ஒண்டிப்புலியாய் கடற்கரையில் மரித்தது
இறக்கும் மதியப் பொழுதிலும் கடலின் சிவப்பை அது சர்பத் என்றே
இறுதிவரை நம்பியது.”
இப்படிப்பட்ட கோரவன்மம் மிகுந்த ஒருவருக்கு எதற்க்காக விருது? யாரை திருப்திப்படுத்த? பானையில் இருப்பது அமிர்தமே என்றாலும் அதில் ஒரு துளி விஷமிருந்தாலும் குப்பையில் கொட்டப்படவேண்டியதே.
முற்றுமுழுதாக இதுபோன்ற அப்பட்டமான கீழ்த்தரமான காழ்ப்புணர்வுடன் ஒரு இனத்தின் ஆன்மாவை குத்தி கிழித்து எழுதப்பட்ட கவிதை என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆகவே தன்னினத்திற்கே தன்னை விரோதியாக கொண்டவனுக்கு கனடா அழைத்து விருது வழங்கி மகிழ்கின்றது கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்.
வாங்குறவனுக்கும் வெட்கமில்லை; கொடுக்கிறவனுக்கும் தகுதி இல்லை அவ்வளவு தான்.