Reading Time: < 1 minute

கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் அல்லது இந்திய கனேடியர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வந்த கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய கனேடியர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் Rainier Jesse Azucena (35) என்னும் நபர், பர்னபி, வான்கூவர் மற்றும் நியூ வெஸ்ட்மின்ஸ்டர் ஆகிய இடங்களில் இந்திய கனேடியர்களைக் குறிவைத்து தாக்குதல் சந்தேகநபர் நடத்தியுள்ளார்.

பேருந்து, அல்லது ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும், அல்லது பேருந்து, ரயில் நிலையங்களில் காத்திருக்கும் சுமார் ஏழு இந்திய கனேடியர்கள் Rainierஆல் தாக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பயணம் செய்துகொண்டிருக்கும்போது அவர்கள் எதிர்பாராத நேரத்தில் திடீரென தாக்குவது Rainierஇன் வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட Rainierக்கு கடுமையான மன நல பாதிப்பு உள்ளதாக தெரியவந்ததையடுத்து கடந்த ஐந்து மாதங்கள் அவருக்கு மன நல சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில், தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் யாரையும் Rainier சந்திக்கக்கூடாது என்றும், ஆயுதம் எதையும் வைத்திருக்கூடாது என்றும், ஒழுங்காக மன நல பிரச்சினைகளுக்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை மூன்று ஆண்டுகளுக்கு Rainier தங்களின் கண்காணிப்பில் இருப்பார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.