Reading Time: < 1 minute

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமையானது நாடுகளுக்கு இடையிலான பயணங்களை பாதிக்கும் என கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய புலம்பெயர் சமூகத்தினர் இந்த கரிசனையை வெளியிட்டுள்ளனர்.

கனடிய பிரஜைகளை கொலை செய்தமை, கொள்ளையிட்டமை, கப்பம் கோரியமை உள்ளிட்ட பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு கனடாவிற்கான இந்திய அரசாங்கம் உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறு இந்திய ராஜதந்திரிகளை கனடிய அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியாவும் கனடிய ராஜதந்திரிகளை வெளியேற்றியிருந்தது.

இவ்வாறான முரண்பாட்டு நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என இந்திய புலம்பெயர் சமூகத்தினர் தெரிவித்துள்னர்.