Reading Time: < 1 minute

கனடாவிலுள்ள ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கும் விரைவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி கிடைக்கச் செய்ய வகை செய்யும் திட்டம் ஒன்று கனடாவிடம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கனேடிய சமுதாயங்களுக்கு பங்களிப்பைச் செய்யும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு அனுமதி வழங்குவதை சாத்தியமாக்கும் திட்டங்கள் குறித்து விசாரிக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau )கனேடிய புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.

தற்போது, அதை சாத்தியமாக்க முடியுமா என்பது குறித்து கனேடிய புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அமைப்பு, நிபுணர்களுடன் தீவிரமாக கலந்தாலோசித்து வருவதாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளரான எய்டன் ஸ்ட்ரிக்லேண்ட் (Aidan Strickland) என்பவர் தெரிவித்துள்ளார்.

அந்த திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில், கனேடிய சமுதாயங்களுக்கு பங்களிப்பைச் செய்யும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு அனுமதி கிடைக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.