Reading Time: < 1 minute

கனடாவில் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மற்றும் கொன்சவேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் பாரிய போட்டி நிலவும் என்று கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.

லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவின் விநோத கறுப்பு முகம் மற்றும் பிளாக்ஃபேஸ் ஊழலை அடுத்து லிபரல் கட்சியினரின் ஆதிக்கம் வீழ்ச்சியடைவதால் கொன்சர்வேடிவ் கட்சியினர் நான்கு புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதாக இப்சோஸ் கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

செப்டம்பர் 20 மற்றும் 23 ஆம் திகதிகளுக்கு இடையில் குளோபல் நியூஸ் இணையத்திற்காக பிரத்தியேகமாக நடத்தப்பட்ட அண்மைய இப்சோஸ் கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்புக்கு மறுதினம் தேர்தல் நடத்தப்பட்டால், 36 சதவீதம் பேர் டோரிகளுக்கு வாக்களிப்பார்கள் என்றும் 32 சதவீதம் பேர் லிபரல் கட்சியினருக்கு வாக்களிப்பார்கள் என்றும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

அதன்படி, தற்போது ஆட்சியில் உள்ள பிரதான கட்சிக்கு மூன்று புள்ளிகள் இழப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பு வாக்களிப்பில் சுமார் 1,500 கனேடியர்கள் இணையத்தின் மூலமாக இணைத்துக் கொள்ளப்பட்ட நிலையில், பிரதமர் ட்ரூடோவின் ஔிப்படங்களை பிளாக்ஃபேஸ் மற்றும் பிரவுன்ஃபேஸில் பார்த்தீர்களா என்று கேள்வியெழுப்பப்பட்டது.

இந்த விடயம் அவரை மன்னிப்பு கேட்க தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.