கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பழங்குடியின மக்கள் செறிந்து வாழும் நிசானாவெப் அஸ்கி பிராந்தியத்தில் ஆபத்தான போதை மருந்துகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மிகவும் ஆபத்தான போதை மருந்து வகைகள் புழக்கத்தில் அதிக அளவு காணப்படுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மிதமிஞ்சிய அளவில் போதை மாத்திரையை பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவ்வாறான சம்பவங்கள் அதிக அளவில் பதிவாகி வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிலவகை போதையும் மருந்துடன் வேறும் சில ரசாயனங்கள் கலக்கப்படுவதனால் இவை மேலும் ஆபத்தானதாக அமையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பென்டானைல் போன்ற போதை மருந்துகளில் பல்வேறு கலப்படங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆயிரக்கணக்கான கிராம், போதை பொருட்கள் டொரன்டோவில் மீட்கப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.