Reading Time: < 1 minute

அழகி போட்டியில் வென்றால் கனடாவில் வாழும் இந்தியருடன் திருமண செய்து வைத்து அங்கேயே வாழ ஏற்பாடு செய்து தரப்படும் என்ற விளம்பரம் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டாவில் தான் இது தொடர்பான விளம்பரங்கள் பல இடங்களில் இடம்பெற்றிருந்தன. அதில், வரும் 23ஆம் திகதி நடைபெறும் அழகி போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு கனடாவில் வசிக்கும் என்.ஆர்.ஐ மாப்பிள்ளையையை திருமணம் செய்து வைக்கப்படும் எனவும் பின்னர் கனடாவிலேயே சொகுசாக வாழலாம் எனவும் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார் சுர்விந்தர் சிங் மற்றும் ராம் தயால் சிங் என்ற இருவரை கைது செய்தனர்.

அவர்கள் தான் இந்த அழகி போட்டியை நடத்தவிருந்தனர் என தெரியவந்துள்ளது