Reading Time: < 1 minute

அல்பர்ட்டாவின் பெஞ்ச்லேண்ட்ஸிலிருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டெவில்’ஸ் ஹெட் காட்டுத்தீ கேம்ப்ஃபயர் (campfire) காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி சுமார் 3,624 ஹெக்டேர் பரப்பளவில் காட்டுத்தீ இருந்தது. கல்கரியிலிருந்து வடமேற்கே 45 கிலோமீட்டர் தொலைவில் பெஞ்ச்லேண்ட்ஸ் அமைந்துள்ளது.

குளிரான வெப்பநிலை மற்றும் குறைக்கப்பட்ட காற்றின் வேகம் ஆகியவை காட்டுத்தீ அடக்கும் முயற்சிகளுக்கு உதவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 23 தீயணைப்பு வீரர்கள், எட்டு ஹெலிகொப்டர்கள், ஒரு விமானம் மற்றும் ஒரு கனரக வாகனக் குழு போராடி வருகின்றது.