Reading Time: < 1 minute

ஏழு புதிய விரைவான நகரும் கிளினிக்குகளைச் சேர்ப்பதன் மூலம் ஒருமணி நேரத்திற்கு 1,000 தடுப்பூசி அளவுகளை வழங்கும் திறன் கிடைக்கும் என அல்பர்ட்டாவின் முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.

மாகாணம் முழுவதும் தடுப்பூசி வழங்கல் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அல்பர்ட்டா இப்போது மாற்றக் கட்டத்தில் இருப்பதாக கென்னி கூறினார்.

‘அதாவது குறிப்பிட்ட அளவீடுகள் (மருத்துவமனையில் அனுமதிப்பது குறைத்தல் போன்றவை), பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே கட்டுப்பாடுகளை நீக்க முடியும்.

ஜூன் மாத இறுதிக்குள் நாங்கள் 2ஆம் கட்டத்தை அடைவோம் என்று நம்புகிறோம். அதாவது கட்டுப்பாடுகள் நீக்கப்படும். திருவிழாக்கள் மீண்டும் தொடங்கலாம். முககவசம் மற்றும் சமூக விலகல் ஊக்குவிக்கப்படும்.

செப்டம்பர் நடுப்பகுதியில், தடுப்பூசி வழங்கல் நிலுவையில் இருப்பதால், நாங்கள் 3ஆம் நிலைக்கு செல்ல முடியும்’ என கூறினார்.