எட்மன்டனை தளமாகக் கொண்ட கஞ்சா நிறுவனமான அரோரா கஞ்சா நிறுவனம், சுமார் 500 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
அத்தோடு, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெர்ரி பூத்தையும் அப்பதவியிலிருந்து அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக சுமார் 500 முழுநேர சமமான ஊழியர்களை நீக்கியுள்ளதாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கங்களால் எந்த நிலைகள் பாதிக்கப்படும் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், அதனை எதிர்கொள்ள நிறுவனம் தயாராவுள்ளதாக கூறப்படுகின்றது.
தலைமை நிர்வாக அதிகாரி டெர்ரி பூத் நீக்கப்பட்டதை தொடர்ந்து, இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக மைக்கேல் சிங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆராய்ச்சி, உற்பத்தி, மொத்த மற்றும் சில்லறை விற்பனை உள்ளிட்ட நோக்கங்களுக்காக இயங்கும் அரோரா கஞ்சா நிறுவனம், சுமார் 25 நாடுகளில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.