கனடிய மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் பழங்குடியின மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக வதிவிட பாடசாலைகளில் கற்று உயிர்தப்பிய பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வதிவிட பாடசாலைகளில் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் கொடுமைகளை வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வதிவிட பாடசாலைகளில் கொல்லப்பட்ட சிறுவர்களின் சடலங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை மற்றும் வதிவிட பாடசாலைகளில் கற்ற மாணவர்கள் பற்றிய பதிவுகளை வெளிக்கொணரும் பணிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதை குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நிதி ஒதுக்கீடு குறைபாடு வதிவிட பாடசாலைகளில் சித்திரவதைகளை அனுபவித்தவர்களுக்கு செய்யும் துரோகச் செயல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வதிவிட பாடசாலைகளில் கற்ற சிறுவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களையும் சித்திரவதைகளையும் எதிர் நோக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாடசாலைகளில் கற்ற பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.