Reading Time: < 1 minute

கனடிய பிதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பய்டனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கனடாவில் காட்டுத் தீ பரவுகையை கட்டுப்படுத்த அமெரிக்கா உதவிகளை வழங்கி வருகின்றது. அமெரிக்காவின் தீயணைப்புப் படையினர் கனடாவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நெருக்கடியான தருணத்தில் கனடாவிற்கு உதவியமைக்காக நன்றி பாராட்டுவதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துளார்.

சுமார் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க தீயணைப்புப் படையினர் கனடாவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை மாலை வேளை வரையில் 362 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிவதாக காட்டுத் தீ குறித்த கனடிய நிலையம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தினால் அடிக்கடி இவ்வாறான காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகும் எனவும், அது மக்களின் வாழ்வாதாரம், அன்றாட வாழ்க்கை, காற்றின் தரம் உள்ளிட்ட பல விடயங்களை பாதிக்கும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.