Reading Time: < 1 minute

அமெரிக்க – கனடா உறவுகள் வலுவான நிலையில் காணப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் இரு நாடுகளின் உறவுகளை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்துடன் கனடா தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் மாறுபட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயற்பட்ட அனுபவம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

நியூ பிரவுன்ஸ்விக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு மற்றும் பரஸ்பர உறவுகள் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை நாடான அமெரிக்காவுடன் பல்வேறு வழிகளில் தொடர்புகள் பேணப்பட்டு வருவதாகவும் இந்த தொடர்பு மேலும் வலுப்படுத்திக் கொள்ளப்படும் எனவும் கனேடிய பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.