Reading Time: < 1 minute

கனடா அமெரிக்காவுடன் இணைந்து கொள்ள வேண்டிய எந்தவித அவசியமும் கிடையாது என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவை அமெரிக்காவின் ஓர் பகுதியாக உள்ளடக்க வேண்டும் என அண்மையில் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

பொருளாதார ரீதியான அழுத்தங்களை பிரயோகித்து கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ள டிரம்ப் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறினும் இவ்வாறான அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக உள்வாங்குவது தொடர்பில் டிரம்ப் அடிக்கடி பேசி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.