கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் அமெரிக்காவின் காலிபோர்னியா மாநிலத்தில் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஆசியான்) மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலியும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மேரி நெக்கும்; இணைந்து கொள்ள உள்ளனர்.
காலநிலை மாற்றம் குறித்த காரணிகளை கருத்திற் கொண்டு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென பிரதமர் இந்த மாநாட்டில் வலியுறுத்த உள்ளார்.
பிரதமர் அலுவலகம் இந்த விஜயம் பற்றிய விபரங்களை அறிக்கையாக வெளியிட்;டுள்ளது.
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வினை எதிர்க்கும் தரப்பினர் இந்த மாநாட்டினை எதிர்த்து போராட்டங்களில் குதி;க்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.