Reading Time: < 1 minute

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) முதலிடம் பிடித்துள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கனடாவிற்கு இந்த இடம் கிடைத்துள்ளது.

இந்த அறிக்கையின் படி கனடாவில் 59.96% படித்தவர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

அறிக்கையின் இரண்டாவது இடத்தில் 52.68% கல்வி அறிவுடன் ஜப்பான் உள்ளது. லக்சம்பர்க் (Luxembourg) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதுடன் தென் கொரியா (North Korea) நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

கல்வி தகுதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 5வது இடத்தை பிடித்துள்ள நிலையில் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிய முன்னணி நாடுகள் 6 மற்றும் 8 வது இடத்தை பிடித்துள்ளது.

அந்தவகையில் அமெரிக்காவையும், இங்கிலாந்து ஆகிய முன்னணி நாடுகளை பின்தள்ளி கனடா முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.